மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் பதவி விலகத் தீர்மானம்

Anura Kumara Dissanayaka Western Province
By Vinoja May 18, 2026 04:28 PM GMT

மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதற்குரிய விருப்பத்தை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

எனினும், புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதவியில் நீடிக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் பதவி விலகத் தீர்மானம் | Western Province Governor S Decision To Resign

தமது பதவி விலகல் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தி நேற்று (17) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.