வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை: மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Department of Meteorology Weather
By Mayuri Aug 13, 2024 02:00 AM GMT
Mayuri

Mayuri

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (13) 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழை நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ரணில் மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

ஜனாதிபதி ரணில் மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை: மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Weather Sri Lanka Warning To People

இடியுடன் கூடிய மழை நிலைமை

அதில் மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை: மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Weather Sri Lanka Warning To People

கிழக்கு கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW