கிழக்கிலும் வடக்கிலும் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples TN Weather Weather
By Rakshana MA Jan 06, 2025 03:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று(06) சில இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மின் கட்டணம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து : வடமத்திய மாகாண நிலவரம்

மின் கட்டணம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து : வடமத்திய மாகாண நிலவரம்

பனிமூட்டம்

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கிலும் வடக்கிலும் ஏற்படவுள்ள வானிலை மாற்றம் | Weather Report Today Sri Lanka

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபோஷா நிறுவனம் தொடர்ந்தும் அரசாங்கத்தின் வசம் : முன்னெடுக்கப்படும் திட்டம்

திரிபோஷா நிறுவனம் தொடர்ந்தும் அரசாங்கத்தின் வசம் : முன்னெடுக்கப்படும் திட்டம்

உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய கல்வித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமரின் கவனம்

உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய கல்வித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமரின் கவனம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW