இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples TN Weather Weather
By Rakshana MA Jan 02, 2025 04:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம்

அடிக்கடி மழை

அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு | Weather Report Today Sri Lanka

இந்த நிலையில் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்பவதுடன் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில், ஹம்பாந்தோட்டை , மாத்தறை ஊடாக பேருவலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதிகரிக்கவுள்ள பேருந்து கட்டணம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரிக்கவுள்ள பேருந்து கட்டணம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரிக்கப்போகும் காற்று

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும் மற்றும் கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு | Weather Report Today Sri Lanka

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும்.

மேலும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்கள்

உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்கள்

மண்ணெண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மண்ணெண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW