இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு
இலங்கையில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(23) வெளியிட்ட அறிக்கை ஒன்றிலே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். ஆகவே பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
நாட்டின் பொரும் பகுதியில் மழை
மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புக்கள் உண்டு.
இதனை தொடர்ந்து மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.
இதற்கிடையில், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படலாம்.
ஆகவே, இந்த தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |