காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு

Sri Lanka Climate Change Weather
By Rukshy Jul 20, 2024 02:06 AM GMT
Rukshy

Rukshy

தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக, நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி தற்காலிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓரளவு பலத்த காற்று வீசும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பலதடவைகள் மழை பெய்யும்.

காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு | Weather Change Forecast

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய இடங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW