இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை பதிவாகும் சாத்தியம்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (23) மழையுடனான வானிலை பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
காற்றின் வேகம்
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவு பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |