இலங்கையின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

Galle Kandy Matara Sri Lanka Weather
By Mayuri Jul 02, 2024 03:09 AM GMT
Mayuri

Mayuri

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (02) இடைக்கிடையே மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சிறிதளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம்

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இலங்கையின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் | Weather Alert In Sri Lanka

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW