புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Police Sinhala and Tamil New Year Crime
By Aanadhi Apr 11, 2024 11:19 PM GMT

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை எச்சரிக்கை செய்துள்ளனர். 

மேலும், போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், நாட்டின் பல பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்கு சிலர் முற்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

warning-issued-by-police-to-people-sl

விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் 

மேலும், பணக் கையாள்கையின் போது நாணயத்தாள்களில் மாற்றம் இருந்தால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.