யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நடைப்பயணம்

Jaffna Sri Lanka
By Nafeel May 01, 2023 02:52 PM GMT
Nafeel

Nafeel

‘புனர்வாழ்வும் புது வாழ்வும்’ என்ற அமைப்பின் ஊடாக வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஐக்கிய ராஜ்யத்தை தளமாகக் கொண்டு இயங்கும் குறித்த அமைப்பின் ஊடாக வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான நடைபவனியில் ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரு 55 கிலோ மீற்றர் வரை நடை பயணம் மேற்கொண்டு நிதியிணைத் திரட்டி அதனைக் கொண்டு வறிய மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுக்கவுள்ளார்.

நடை பயணம் பருத்தித்துறை வீதி ஊடாக பருத்தித் துறைமுனையினை அடைந்து மீண்டும் புத்தூர் சந்தியில் நிறைவடையவுள்ளது. இதன்மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை கொண்டு குடிநீர் அற்ற மக்களுக்கு கிணறுகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் வீடற்றோருக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தல் பாடசாலைகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல் போன்றவற்றிற்காக செலவிடப்படவுள்ளது.

Gallery