தவெக பெரும்பான்மையை நிரூபித்தது - தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார் விஜய்!

Vijay Tamil nadu Tamil Actors TVK
By Vinoja May 09, 2026 03:56 PM GMT

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களின்  ஆதரவை அளித்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தான் என்பது உறுதியாகியுள்ளது.

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதில் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால் இன்று வரையில் சிக்கல் நிலவி வந்தது.

தவெக பெரும்பான்மையை நிரூபித்தது - தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார் விஜய்! | Vijay Oath As Chief Minister

ஆட்சியமைக்க 118 எம்எல்ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடியது.

காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்தது, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியது, இந்நிலையில் இன்றை தினம் விசிக ஆதரவு அளித்துள்ள நிலையில் 118 எம்எல்ஏ-க்களை பெற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராவது உறுதியாகியுள்ளது.