ஒன்பது மாதங்களில் இரண்டு இலட்சம் வாகனங்கள் இறக்குமதி

Economy of Sri Lanka vehicle imports sri lanka Import
By Shrikanth Sep 11, 2025 12:26 PM GMT
Shrikanth

Shrikanth

2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 1, வரை 200,026 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 154,537 ஏற்கனவே சுங்கத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற நிதிக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தரவுகளின்படி, விடுவிக்கப்பட்ட வாகனங்களில் 98,923 மோட்டார் சைக்கிள்கள், 40,323 கார்கள், 9,025 முச்சக்கர வண்டிகள், 5,368 வணிக வாகனங்கள் மற்றும் 898 வேன்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவை அடங்கும்.

பொலிஸ் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

பொலிஸ் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இறக்குமதி மூலம் சுங்கத் துறைக்கு 

இந்த வாகனங்கள் இறக்குமதி மூலம் சுங்கத் துறைக்கு ரூ. 429 பில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

ஒன்பது மாதங்களில் இரண்டு இலட்சம் வாகனங்கள் இறக்குமதி | Vehicle Import Sri Lanka

இந்தக் காலகட்டத்தில் வாகன இறக்குமதிக்காக 30,594 கடன் பத்திரங்கள் (LC) திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த தொகை 1,491 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் குழு மேலும் வெளிப்படுத்தியுள்ளது.

விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறினார் மகிந்த...

விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறினார் மகிந்த...