வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்
குறிப்பிட்ட சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த தீர்மானத்திற்கு மத்திய வங்கியும் இணக்கும் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் இன்று (29) மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி
இதற்கமைவாக எதிர்காலத்தில் முறையான முறைமை தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நபர்களை உள்ளடக்கி கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு, நமது பணம் பாரியளவில் வெளியில் செல்லாமல் இருக்க முறையான நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |