வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் வரிப்பணம்

Sri Lanka vehicle imports sri lanka Import Anil Jayantha Fernando
By Benat Feb 21, 2025 06:38 AM GMT
Benat

Benat

வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் 600 - 700 பில்லியன் ரூபா வரிப்பணத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாக தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியாத பட்சத்தில், வாகன இறக்குமதி வரி வரம்புகளை குறைப்பது குறித்து மத்திய வங்கி கவனம் செலுத்தி வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

[NHLETB ]

இதேவேளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் முன்னதாகவே பணம் செலுத்த வேண்டாம் எனவும், இலங்கை வந்த பின் வாகனங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள், வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், வாகன இறக்குமதி தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஆபத்து தொடர்பிலும் பலரும் எச்சரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.