வாகன இறக்குமதி அனுமதி குறித்து வெளியான புதிய தகவல்

Shehan Semasinghe
By Mayuri Jul 29, 2024 03:53 AM GMT

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தலை இலக்காக கொண்டு அரசாங்கத்தால் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு நாட்டை இட்டுச் செல்ல முடியாது.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

ஆகஸ்ட் மாதத்திற்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் எப்படி படிப்படியாக நீக்கப்படும் என்பது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் உங்களுக்கு தெரிவிப்போம்.

வாகன இறக்குமதி அனுமதி குறித்து வெளியான புதிய தகவல் | Vehicle Import In Sri Lanka

வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களுக்கான அனுமதியை முதல் கட்டத்தில் வழங்குவோம். ஆனால் 2025இன் முதல் காலாண்டில் தனியாருக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW