மரக்கறி விலையில் வீழ்ச்சி: நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள விவசாயிகள்

Sri Lanka Upcountry People Sri Lanka Politician Sri Lanka Economy of Sri Lanka Vegetables Price
By Rakshana MA Oct 27, 2024 11:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

மரக்கறி விலையில் வீழ்ச்சியடைந்ததையடுத்து மலையகம் மற்றும் மத்திய பிரதேச விவசாயிகள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர்களினால் கல்முனை பாலிகாவுக்கு புகைப்பட நகல் இயந்திரம் வழங்கி வைப்பு

பெற்றோர்களினால் கல்முனை பாலிகாவுக்கு புகைப்பட நகல் இயந்திரம் வழங்கி வைப்பு

விவசாயிகளின் அவலம்

மேலும் தெரிவிக்கையில் தம்புள்ளை, கேப்பிட்டிபொல, நுவரெலியா, எம்பிலிபிட்டிய ஆகிய விசேட பொருளாதார மத்திய நிலையங்களில் இடம்பெற்ற விலை குறைப்பின் மூலம் எந்த பலனும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.

மரக்கறி விலையில் வீழ்ச்சி: நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள விவசாயிகள் | Vegetable Price Update Released For 2024

அதுமட்டுமன்றி உற்பத்திச் செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. அறுவடை செய்து, பொருளாதார மையங்களுக்குக் கொண்டு சென்று முற்பணம் கொடுத்தும், வருமானம் கிடைக்காத அவலமான சூழ்நிலையில் விவசாயிகள் இன்று காணப்படுகின்றனர்.

சம இடைவெளியில் விலை நிர்ணயம்

மேலும் இலங்கையில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லாமல் சில இடங்களில் காய்கறிகளின் விலைகள் இன்னும் அதிகமாகவே காணப்படுகின்றன. விவசாயிகள் பெறும் விலைக்கும் நுகர்வோர் பெறும் விலைக்கும் இடையிலான இடைவெளி மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

மரக்கறி விலையில் வீழ்ச்சி: நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள விவசாயிகள் | Vegetable Price Update Released For 2024

இந்த நிலைமையினை அரசாங்கமானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார். 

பழங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பழங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

போர் நிறுத்ததத்திற்கு இணக்கம் தெரிவித்த இஸ்ரேல்

போர் நிறுத்ததத்திற்கு இணக்கம் தெரிவித்த இஸ்ரேல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW