நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Ranil Wickremesinghe President of Sri lanka Economy of Sri Lanka
By Chandramathi Mar 07, 2024 12:43 AM GMT
Chandramathi

Chandramathi

எதிர்வரும் காலத்தில் பெறுமதி சேர் வரியை மேலும் குறைப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதுடன் பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள், மருந்து பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்னறத்தில் நேற்று(06)உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிவாரணம்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,''நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு | Vat Tax Increased In Sri Lanka

புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் வற் வரி நீக்கப்படும்.

குறைந்த வருமானம் பெறும் 24 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணங்களை வழங்க முடியாது.

ஒரு தரப்பினர் அதிகாரத்துக்காக பொய்யுரைக்கிறார்கள்.மக்கள் மீது தேவையில்லாமல் வரிச் சுமைகளை அரசாங்கம் சுமத்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

எமது நாட்டில் பல அரசாங்கங்கள் கையாண்ட தவறான பொருளாதார கொள்கை காரணமாகவே நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்பின் ஊடாக இந்த நிலைமையை மாற்றியமைத்தோம். அதன் பயனை முழுநாடும் இன்று அனுபவிக்கின்றது.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு | Vat Tax Increased In Sri Lanka

இதற்கமைய வெளிநாட்டு அரசமுறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும்.

2023ஆம் ஆண்டு தொடக்கம் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படும்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது.'''என கூறியுள்ளார்.