வரலாற்றில் முதல் முறையாக முட்டைக்கு வற் வரி
                                    
                    Economy of Sri Lanka
                
                                                
                    Egg
                
                                                
                    Value Added Tax (VAT)
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (01.04.2025) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வற் வரி
இது தொடர்பில் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், முட்டைகளுக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்பட்டாலும் முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது.

வரலாற்றில் முட்டைகளுக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.
முட்டைகள் மீது வற் வரியை விதிப்பது நியாயமற்றது. முட்டைத் தொழிலின் வீழ்ச்சிக்கு இது வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    