இலங்கை பொருட்கள் மீது அமெரிக்காவின் வரி
அமெரிக்கா, இலங்கை ஏற்றுமதி பொருட்களுக்காக விதித்துள்ள 20% வரி காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், ஆடைத் துறை, தேயிலை, விவசாயம் மற்றும் கடலுணவு போன்ற அமெரிக்காவுக்கான முக்கிய ஏற்றுமதி பிரிவுகள் மீது நேரடி பாதிப்பு ஏற்படும் எனவும், உற்பத்தி செலவுகள் உயரும் எனவும் குறிப்பிடப்பட்டது.
இந்த சூழ்நிலையை சமாளிக்க புதிய சந்தைகள் தேடல், வர்த்தக உடன்பாடுகள் மீளாய்வு மற்றும் உற்பத்தி திறனில் மேம்பாடு தேவைப்படும் என ஆலோசிக்கப்பட்டது.
நேரடி பாதிப்பு
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, ஒருமித்த அணுகுமுறை மற்றும் அரச, தனியார் துறைகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அவசியம் என வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |