பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

By Rakshana MA Aug 07, 2025 06:03 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பொது போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த 0719090900 இலக்கத்திற்கு குறுந்தகவல் (SMS - மற்றும் Whatsapp) மற்றும் 021 228 5120 நிலையான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கரினை பேரூந்துக்களில் ஒட்டும் நிகழ்வு மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் அவர்களினால் நேற்றைய தினம் (06.08.2025) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இனப்படுகொலைக்கு உள்ளான திராய்க்கேணியில் தொடரும் நெருக்கடி! கிழக்கு ஈழத்து இனவழிப்பு வரலாறு

இனப்படுகொலைக்கு உள்ளான திராய்க்கேணியில் தொடரும் நெருக்கடி! கிழக்கு ஈழத்து இனவழிப்பு வரலாறு

முறைப்பாட்டு இலக்கம் 

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம் | New Helpline For Transport Issues In Sl

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைகள் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைகள் அறிவிப்பு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW