இலங்கைக்கு இஸ்ரேலியர்களின் வருகை அமெரிக்காவின் அழுத்தமா..?

Parliament of Sri Lanka Sri Lankan Peoples Mujibur Rahman
By Rakshana MA Aug 05, 2025 10:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

இஸ்ரேலியர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அழுத்தமாகவோ அல்லது நிபந்தனையாகவோ இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (04.08.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பிரஜையொருவர் அருகம்பை பிரதேசத்திலிருந்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆட்டத்திற்கு பிறகு காசாவுக்க ஆதரவு வழங்கிய இலங்கை வீரர்! விதிக்கப்பட்ட அபராதம்

ஆட்டத்திற்கு பிறகு காசாவுக்க ஆதரவு வழங்கிய இலங்கை வீரர்! விதிக்கப்பட்ட அபராதம்

அரசாங்கத்தின் திட்டம்

தற்போது அருகம்பை இஸ்ரேலில் ஒரு கொலனியாக மாறியிருக்கிறது என்பது வெளிநாட்டவர்களுக்கு கூட புரிந்துள்ளது.

நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கசாயம் அருந்தியவர்களைப் போன்று இருக்கின்றனர்.

இலங்கைக்கு இஸ்ரேலியர்களின் வருகை அமெரிக்காவின் அழுத்தமா..? | Us Pressure On Israel Sl Ties

கடந்த ஆட்சி காலத்தில் தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமெரிக்க தூதரகத்துக்கு முன்னதாகவே நீண்ட நாட்களைக் கழித்திருக்கின்றார்.

ஆனால் இன்று அவரிடமிருந்து எந்த சத்தமும் இல்லை. மாறாக இஸ்ரேலையும், அமெரிக்காவையும் அரவணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேலியர்கள் மொசார்ட்டைப் போன்று இலங்கையில் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் காணப்படுகிறது.

இது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என நாம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றோம். இஸ்ரேலுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று அரசாங்கம் எண்ணுகிறது.

கடந்த 4 மாதங்களில் 3000ற்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது

கடந்த 4 மாதங்களில் 3000ற்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது

இஸ்ரேலியர்கள் குடியேற்றம் 

அவர்களுடன் உறவாடினால் இலாபத்தை விட பாரிய இழப்பீட்டை செலுத்த நேரிடும் என்பதையும் அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம்.

இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வந்து கொலனியமைப்பதற்கு இடமளித்தமைக்காக பின்னர் அனைவரும் வருந்த வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

இலங்கைக்கு இஸ்ரேலியர்களின் வருகை அமெரிக்காவின் அழுத்தமா..? | Us Pressure On Israel Sl Ties

எந்த அடிப்படையில் கட்டணமின்றி இஸ்ரேலியர்களுக்கு வீசா வழங்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தீர்மானித்தார் என்பது எமக்கு தெரியாது.

இது அமெரிக்காவின் அச்சுறுத்தலா? அல்லது யாருடைய அச்சுறுத்தல் என்பதும் எமக்கு தெரியாது. இஸ்ரேலியர்களுக்கு இலங்கை வர வாய்ப்பளிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்க கூடும்.

இது அமெரிக்காவின் நிபந்தனையாக கூட இருக்கலாம். அமெரிக்கா, இஸ்ரேல் என்பவை வெளியுலகுக்கு இரு வேறு நாடுகள் என்ற போதிலும்.

இன்று அவை இரண்டும் ஒரே நாடுகள் ஆகும். இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையால் நாட்டுக்கு எதிர்காலத்தில் பாரிய அழிவு காத்திருக்கிறது என்றார்.

இலங்கையிலுள்ள புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையிலுள்ள புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

இஸ்ரேல் கைதிகளுக்கு உதவ தயாராக ஹமாஸ்

இஸ்ரேல் கைதிகளுக்கு உதவ தயாராக ஹமாஸ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW