இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய உதவி
Sri Lanka
United States of America
Sri Lanka Air Force
By Rakshana MA
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா இராணுவ தளபாடம் ஒன்றை வழங்கியுள்ளது.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க உதவியாக இது அமைந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த உதவியின் கீழ் அமெரிக்க அரசாங்கம், பெறுமதிமிக்க விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இரண்டு வாகனங்களை இலங்கையின் விமானப்படைக்கு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் உதவி
முற்றிலும் இலவசமாக இந்த வாகனங்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.
ஏற்கனவே, இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 20 சதவீதமாக குறைத்துள்ள நிலையில், இந்த வாகன வழங்கலும் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |