வெளிநாட்டினருக்கு வீடு வாடகைக்கு விடும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Benat May 06, 2026 08:28 AM GMT

வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடும் மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸாருக்கு அறிவியுங்கள் 

வெளிநாட்டினர் ஒருவருக்கு வீடோ அல்லது வேறு ஏதேனும் சொத்துக்களோ வாடகைக்கு விடப்பட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டினருக்கு வீடு வாடகைக்கு விடும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை | Urgent Warning For Renting Out Homes To Foreigners

மேலும், சில வெளிநாட்டினர் இதுபோன்ற வீடுகளை வாங்குவதன் மூலம் நிதிக் குற்றங்களில் ஈடுபடும் சூழல் நிலவுவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெளிவுபடுத்தியுள்ளார்.