பல்கலைக்கழக மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பிலிமத்தலாவை பரகட வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் கடந்த செவ்வாய்க்கிழமை (23) மதியம் வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, யட்டிநுவர மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன (Senaka Karunaratne) முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது “எல்லா இரகசியங்களுக்கும் விடைகொடுக்கிறேன்" என மாணவன் எழுதிய கடிதம் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவன்
மேலும், உயிரிழந்த மாணவனின் தாயார் உதவி அதிபர் எனவும் அவரும் ஏனைய இரு பிள்ளைகளும் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருக்கவில்லையெனவும் காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இந்த மாணவன் சுமார் இரண்டு மாதங்களை வீட்டிலேயே கழித்துள்ளதாகப் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனடிப்படையில், பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கசுன் ஏகநாயக்கவினால் (Kasun Ekanayake) பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன தவறான முடிவெடுத்தமையினாலேயே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |