மௌலவி ஒருவருக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி
போதைப்பொருள் பாவிப்போரின் ஜனாஸாவுக்கு தாம் வரமாட்டோம் என பாலாங்கொடை பள்ளிவசால் ஒன்றில் மௌலவி ஒருவர் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளமையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டியுள்ளார்.
ஒரு தேசமாக ஒன்றிணைதல் - தேசிய இயக்கம் என்ற தலைப்பில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய முயற்சி, அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முடிவு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "போதைப்பொருட்களை ஒழிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், இன்று நமது நாட்டைச் சூழ்ந்து கொண்டிருக்கும் தீய நோயைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபட்டுள்ளோம்.

ஒரு தேசமாக நாம் இந்த தீய கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம், இது இந்த நேரத்தில் எழுந்த ஒரு சவால் அல்ல இது பல தசாப்தங்களாக படிப்படியாக வளர்ந்து வருகின்றது, இப்போது அது முழு சமூகத்தையும் மூழ்கடிக்கும் நிலையை எட்டியுள்ளது.
நாட்டின் எதிர்காலம்
அத்துடன், என்னைப் போலவே இந்த கொள்ளை நோயை ஒழிக்க எங்கள் அரசாங்கமும் முடிவு செய்துள்ளது.
இந்த கொள்ளை நோய் எமது குழந்தைகளின் தலைமுறையை மூழ்கடிக்கும் நிலையை எட்டியுள்ளது.
மேலும், சிறையில் உள்ளவர்களில் 64 சதவீதம் பேர் போதைக்கு அடிமையானவர்கள், இந்நிலையில் நாட்டின் எதிர்காலம் அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |