அநுர தலைமையில் ஆரம்பமான தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டம்
"ஒரு தேசமாக ஒன்றிணைதல் - தேசிய இயக்கம்" என்ற தலைப்பில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய முயற்சி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று(30.10.2025) காலை 10.00 மணியளவில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளது.
புதிய முயற்சியின் முதன்மை குறிக்கோள்
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், சமூக பாதுகாப்பு குழுக்கள், பொலிஸார், முப்படை உறுப்பினர்கள் மற்றும் 50 வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன் கலந்து கொண்ட அனைவரும் அநுர தலைமையிலான குறித்த தேசிய பிரசாரத்திற்கு ஆதரவளித்தனர்.
மேலும், இலங்கையின் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் கடத்தலை ஒழிப்பதே இந்த முயற்சியின் முதன்மை குறிக்கோளாகும்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |