சஜித்திற்கு ஆதரவு! புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைச்சாத்து
Sajith Premadasa
Sri Lanka Freedom Party
By Mayuri
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
25 விடயங்கள் அடங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கொள்கையளவிலான 25 விடயங்கள் அடங்கலாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |