ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் அதிரடியாக கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்யைதினம் உதயங்க வீரதுங்கவை கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயல் வீட்டாரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக ரஉதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ரஷ்யாவுக்கான (Russia) முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (10) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது அயல் வீட்டில் வசிக்கும் நபர் மீது தாக்குதல் நடத்தியக் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், நேற்றையதினம் மிரிஹான பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இன்று காலை உதயங்க வீரதுங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |