மட்டக்களப்பில் வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு இந்தியர்கள் கைது
இந்தியாவில் (India) இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசா மூலம் வருகை தந்து சட்டவிரோதமாக புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (30) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று மாலை மட்டக்களப்பு ஏறாவூர் - தளவாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
இருவர் கைது
இதன்போது, அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் தமிழ்நாடு - மதுரையைச் சேர்ந்த குறித்த இருவரும் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 38 வயதுடைய பெண் மற்றும் அவரின் சகோதரரான 51 வயதுடைய நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசா
குறித்த இருவரும் கடந்த ஜூன் மாதம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து இந்த பகுதில் தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ,கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |