நாட்டை வந்தடையவுள்ள இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள்

Fuel Price In Sri Lanka Petrol diesel price Fuel Price In World
By Aanadhi Jun 09, 2026 07:33 AM GMT

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளையும், மறுநாளும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார அது தொடர்பான தகவலை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் ஒக்டேன் 95 பெற்றோல் 7 ஆயிரம் தொன் மற்றும் ஒக்டேன் 92 பெற்றோல் 29 ஆயிரம் தொன் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு நாளைய (10) தினம் எரிபொருள் தாங்கிக் கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

எரிபொருள் தாங்கிக் கப்பல்

அதே போன்று நாளை மறுதினம் (11) 29 ஆயிரம் மெற்றிக தொன் டீசல் ஏற்றிக் கொண்டு எரிபொருள் தாங்கிக் கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இதற்கிடையே 32 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் மற்றும் 7ஆயிரத்து 200 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் என்பன எரிபொருள் தாங்கிக் கப்பலொன்றில் இருந்து கொழும்புத் துறைமுகத்தில் இறக்கும் பணிகள் தற்போதைக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.