ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவு - ட்ரம்ப் முன்வைத்துள்ள புதிய குற்றச்சாட்டு

Donald Trump Iran Iran-US Conflict
By Dhushi Jul 08, 2026 10:10 AM GMT

ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தம் இப்போது முடிந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பேச்சுவார்த்தைகள் தொடர அவர் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் அங்காராவில் இன்று(08.07.2026) இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றாலும், அது ஒரு வெற்றிகரமான முடிவைத் தருமா என்பதில் தனக்குச் சந்தேகம் உள்ளது.

ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவு - ட்ரம்ப் முன்வைத்துள்ள புதிய குற்றச்சாட்டு | Trump On The End Of The Ceasefire With Iran

அவர்கள் பேசலாம், ஆனால் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என குற்றம் சுமத்தியுள்ளார்.