ஹோர்முஸை திறக்க ஈரான் முன்வைத்த நிபந்தனைகள்.. ட்ரம்ப் எடுக்கும் முக்கிய நகர்வு

Donald Trump Iran Strait of Hormuz
By Sajithra Apr 28, 2026 01:54 AM GMT

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸை (Hormuz Strait) மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் வழங்கிய புதிய முன்மொழிவு குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள தீவிரமாக முயற்சிப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் விசேட அறிவிப்பு.. 

இருப்பினும், ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் அமெரிக்காவின் ‘சிவப்பு கோடுகளை’ (Red lines) தாண்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்முஸை திறக்க ஈரான் முன்வைத்த நிபந்தனைகள்.. ட்ரம்ப் எடுக்கும் முக்கிய நகர்வு | Trump Discusses Iran Offer Open Straits Of Hormuz

ஈரானிய ஆட்சிக்குள் நிலவும் உள்முரண்பாடுகளே ஒரு நிரந்தர உடன்பாட்டை எட்டுவதற்கு பெரும் தடையாக இருப்பதாகவும், அங்குள்ள கடும்போக்குவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியால் பேச்சுவார்த்தைகள் சிக்கலாகியுள்ளதாகவும் ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகையால் ஈரானின் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து ட்ரம்ப் விரைவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.