காசா மீது மீண்டும் போர்! டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

Israel World Israel-Hamas War Gaza
By Rakshana MA Feb 12, 2025 05:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்த வார இறுதிக்குள் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்துவதாகக் கூறியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்நிலையில் ட்ரம்பின் கருத்தானது, இது போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது குறித்து புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பணயக்கைதிகள் விடுவிப்பு

இது தொடர்பில் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில், “சிறைபிடிக்கப்பட்டவர்கள் குறித்து ஹமாஸ் அமைப்பு அச்சங்களை வெளிப்படுத்தி வருகின்றது.

காசா மீது மீண்டும் போர்! டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு | Trump Announcement To Attack On Gaza

எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் பலர் உயிர் பிழைக்க மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை, சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்டுள்ள பணயக்கைதிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாகக் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, சனிக்கிழமை திட்டமிடப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த விரும்புவதாக ஹமாஸ் அறிவித்த சில மணி நேரத்திற்குள் ட்ரம்பின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

தொடரும் மின்வெட்டு : இலங்கை மின்சார சபை விளக்கம்

தொடரும் மின்வெட்டு : இலங்கை மின்சார சபை விளக்கம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW