ஈரானின் நிபந்தனைகளை மீண்டும் நிராகரித்தார் ட்ரம்ப்!

Donald Trump United States of America Iran World
By Vinoja May 11, 2026 04:53 PM GMT

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதற்றத்தைத் தணிக்க ஈரான் முன்வைத்த புதிய சமாதானத் திட்டத்தை, "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" எனக் கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்துள்ள அதிகாரப்பூர்வ பதில் குறித்து அதிபர் டிரம்ப் தனது முதல் நேரடியான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஈரானின் நிபந்தனைகளை மீண்டும் நிராகரித்தார் ட்ரம்ப்! | Trump Again Rejects The Iran S Condition

ட்ரம்ப் பதிவு 

"ஈரானின் 'பிரதிநிதிகள்' என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து வந்த பதிலை நான் இப்போதுதான் படித்தேன். எனக்கு அது பிடிக்கவில்லை, முற்றிலும் ஏற்க முடியாது! இந்த விவகாரத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி," என காட்டமாக தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் "அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப்" என்ற தனது பெயரிட்டே இந்த அதிரடியான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவுடனான இந்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான் மூலமாகவே தங்களின் அதிகாரப்பூர்வ பதில் இன்று அமெரிக்காவிடம் வழங்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

"அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஈரானின் நிபந்தனைகளை டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்திருப்பது பேச்சுவார்த்தையில் மாபெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது.

போர்நிறுத்தம் தோல்வியடைந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்குமா என்ற அச்சம் வளைகுடாப் பகுதியில் எழுந்துள்ளது!"