திருகோணமலை வதை முகாமில் சிக்கிய மக்கள்! வெளியான ஆதாரம்
திருகோணமலை (Trincomalee) கடற்படை முகாம், அந்த காலகட்டத்தில் ஒரு வதை முகமாக செயற்பட்டு வந்ததாக முன்னதாக கூறப்பட்டிருந்தது.
2014ஆம் ஆண்டு காலத்தில் அமெரிக்காவுக்கான சர்வதேச குற்றவியல் நிபுணராக இருந்த ஸ்டீபன் ஜெ. ரப் ஒரு வார கால பயணமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தார்.
குறித்த பயணத்தின் போது திருகோணமலையில் ஒரு வதை முகாம் இருந்தமை தொடர்பில் அவர் நோட்டமிட்டதாக கூறப்படுகின்றது.
நிலத்துக்கு கீழே அமைந்திருந்த இந்த வதை முகாமில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
'Gun Site' என அழைக்கப்பட்ட இந்த வதை முகாம் தொடர்பான விசாரணைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தீவிரமடைந்திருந்தது.
இந்த வதை முகாம் தொடர்பில் முதன்முதலில் வெளிக்கொணர்ந்தவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவிராசா ஆவார். இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |