திருகோணமலையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
திருகோணமலை (Trincomalee) - வானெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குளம் ஒன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது நேற்றையதினம் (2) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, வான்எல பகுதியைச் சேர்ந்த 40 வயதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான கொட்டகெடகே நிரோஷன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாது, கடந்த (31.12.2024) மாலை குறித்த நபர் விருந்தொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர் என்று, ஆரம்பகட்ட விசாரணையிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |