கொழும்பில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடல்
Trincomalee
Dinesh Gunawardena
Mahinda Yapa Abeywardena
R. Sampanthan
Ranil Wickremesinghe
By Mayuri
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் பூதவுடல் இன்று (02) காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் உடல்
நாளைய தினம் (03) 2 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயக்கர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.
அங்கு 4 மணிவரையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.