ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Colombo High Court of Sri Lanka
By Independent Writer Jun 01, 2026 10:15 AM GMT

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, விசாரணை செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது குறித்த விசாரணைக்கான திகதிகளை நிர்ணயிப்பதற்காக ஜூன் 26 அன்று அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசார தேரரின் இஸ்லாமிய நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஞானசார தேரர்

இன்று இவ்விவகாரம் விசாரணைக்கு வந்தபோது, ​​கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Trial Against Venerable Gnanasara Thero

வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்தாய்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து, விசாரணைத் திகதியை நிர்ணயிப்பதற்காக, ஜூன் 26 அன்று வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.