தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தங்கள்

Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka Highways In Sri Lanka
By Shalini Balachandran Jul 14, 2024 09:43 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

திருத்தச் சட்டமூலம்

அந்தவகையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தங்கள் | Transport Regulation Amendments In August

இதேவேளை முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஊடாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் அதிகாரத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW