பிரான்ஸில் சோகம் : அடுக்குமாடி குடியிருப்பில் சடலங்களாக மீட்கப்பட்ட புலம்பெயர் தமிழர்கள்

France Death World
By Rukshy Apr 09, 2026 12:32 PM GMT
Rukshy

Rukshy

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் ஈழத் தமிழர்களான தாயும் மகளும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயதுடைய தாய் மற்றும் அவரது 20 வயதுடைய மகள் ஆகிய இருவருமே உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக 

இவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து நீண்ட நாட்களாக எவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இருவரும் உடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் சோகம் : அடுக்குமாடி குடியிருப்பில் சடலங்களாக மீட்கப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் | Tragedy France Bodies Srilankan Mother Daughter

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இது உயிர்மாய்ப்பாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏதேனும் கடிதங்கள் அல்லது மேலதிக ஆதாரங்கள் கிடைத்துள்ளனவா என்பது குறித்த விபரங்களை பொலிஸார் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.

தனிப்பட்ட மன உளைச்சல் அல்லது பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.