சுற்றுலா சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம் - அதிர்ச்சியில் கர்ப்பிணி மனைவி

Sri Lanka Sri Lankan Peoples Accident
By Fathima Jan 27, 2026 04:49 AM GMT
Fathima

Fathima

புத்தளம், மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மோதரவெல்ல பகுதியில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் மனைவி தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் குருநாகல், வேவரவு பகுதியைச் சேர்ந்த 38 வயதான நலிந்த சதுரங்க அனுருத்த மெண்டிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திடீர் அலை

அலுவலக பணியாளர்களுடன் நேற்று முன்தினம் வெஹெர பகுதியில் இருந்து பேருந்தில் சிலாபம் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சுற்றுலா சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம் - அதிர்ச்சியில் கர்ப்பிணி மனைவி | Tragedy Befell A Young Man Who Went On A Trip

இதன்போது தல்வில பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது திடீர் அலையில் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அலைகளில் சிக்கிய 47 வயதுடைய ஒரு பெண்ணையும் அவரது 16 வயது மகளையும் அங்கிருந்த வெளிநாட்டு குழுவொன்று மீட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு நிலை காரணமாக உயிரிழந்தவர் மீது எந்த கவனமும் செலுத்தப்படவில்லை.

எனினும் குழுவில் அவர் காணவில்லை என்பதை அறிந்து கொண்டு கடலில் மூழ்கியவரை தேடிப் பிடித்துள்ளனர்.

உடனடியாக மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.