மூதூரில் விபத்து : ஒருவர் பலி

Sri Lankan Peoples Eastern Province Accident Death
By Rakshana MA Aug 07, 2025 12:45 PM GMT
Rakshana MA

Rakshana MA

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி - கொழும்பு வீதி, பொத்தானை சந்தியில் உழவு இயந்திரம் - மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (7) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது, வேளாண்மை அறுவடை செய்யும் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தோப்பூர் பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு!

தோப்பூர் பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு!

விபத்து சம்பவம்

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் அச்சி முகம்மட் பரீட் என்பவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

மூதூரில் விபத்து : ஒருவர் பலி | Tractor Bike Crash Kills One Man

அவருடன் பயணித்த காவத்தமுனையை பிறப்பிடமாகவும், பிறைந்துரைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அசனார் முகம்மட் நிப்ராஸ் என்பவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்த தமிழ் மக்கள் - திராய்க்கேணி படுகொலை

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்த தமிழ் மக்கள் - திராய்க்கேணி படுகொலை

சம்பூரில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணை

சம்பூரில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   
GalleryGallery