சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

By Mayuri Sep 15, 2024 10:45 AM GMT

இந்த மாதத்தின் கடந்த 11 நாட்களில் மாத்திரம் 44,000இற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.

இதன்படி இந்த காலப்பகுதியில் 44,977 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வருகை

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு | Tourist In Sri Lanka

அத்துடன் பிரித்தானியா, ஜேர்மனி, சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW