இனி ஒன்றரை மணிநேரம் மின்தடை! வெளியான தகவல்
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கும் வரை மின்சாரத் தடையை நடைமுறைப்படுத்த வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை தனது தீர்மானத்தை அறிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்பட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மின் வெட்டு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டவுள்ளது.
தீர்மானம்..
இந்த நிலையில், கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 13 உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இவ்வாறு தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் காலை 11.15 மணி முதல் மாலை வரை நாடளாவிய ரீதியில் திடீர் மின் ஏற்பட்டதுடன், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களிலும் கூட இவ்வாறு மின் தடை ஏற்படக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |