பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை
பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கையில் இன்று (04) சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவது, குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் குழந்தைகளுக்கான நட்புச் சூழலை உருவாக்குவது ஆகியவை இதன் நோக்கமாகும்.
மனநல சிகிச்சை
இதேவேளை, சிறுவர் மனநல சிகிச்சை நிலையங்களுக்கு வரும் சிறுவர்களில் பலர் புகையிலை தொடர்பான பல்வேறு பொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |