இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கி(CBSL) இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளன.
இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.46 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 303.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பணப்பெறுமதி
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 212.04 ரூபாவாகவும், கொள்வனவு விலை 203.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 317.23 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 304.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 374.93 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 361.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 192.28 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 182.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 225.36 ரூபாவாகவும் ஆகவும் ,கொள்வனவு பெறுமதி 215.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 1.94 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.87 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |