வாகன விபத்தில் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி காயம்

Colombo Tissa Attanayake Accident
By Dhayani Jul 18, 2024 03:06 AM GMT

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் வாகனம் ஜாவத்தை வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில், நாரஹேன்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகன விபத்தில் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி காயம் | Tissa Athanaya Vehicle Accident

பொலிஸார் விசாரணை 

நாடாளுமன்ற உறுப்பினரின் ஜீப்பும் ,காரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW