அதிகாலையில் முச்சக்கர வண்டி முறிந்து விழுந்த மரம்: பாடசாலை மாணவி உட்பட மூன்று பேர் பலி

By Independent Writer Jun 04, 2026 06:05 AM GMT

கண்டி - நாவலப்பிட்டி வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவி ஒருவரும் மேலும் இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நாவலப்பிட்டியாவில் உள்ள மபாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டியாவுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும், முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் விபத்தில் உயிர் தப்பியதாக நாவலப்பிட்டிய காவல்துறையினர் கூறியுள்ளனர்.

நாவலபிட்டிய காவல்துறை

இந்த விபத்து இன்று காலை (04) சுமார் 6:45 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

சில காலமாக காய்ந்த நிலையில் இருந்த குறித்த  யூகலிப்டஸ் மரத்தை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்குத் தெரிவித்த போதிலும், இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை என்று உள்ளூர்வாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் நாவலபிட்டிய காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.