டுவிட்டருக்கு பதிலாக அறிமுகமாகும் புதிய செயலி: அதிரடி காட்டும மெட்டா
உலகின் முதல் நிலை சமூக ஊடகங்களில் ஒன்றாக கருதப்படும் டுவிட்டருக்கு பதிலாக புதிய செயலி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் 6ஆம் திகதி இந்த செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலி இந்த புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் டுவிட்டரை கொள்வனவு செய்த உலகின் முதல் நிலை செல்வந்தர்களில் ஒருவரான எலன் மாஸ்க twitter பயன்பாடு தொடர்பில் பல்வேறு நிபந்தனைகளை அறிமுகம் செய்து வருகின்றார்.

புதிய செயலி அறிமுகம்
இந்த கெடுபிடிகள் காரணமாக பல்வேறு பயனர்கள் டுவிட்டர் பயன்படுத்துவதனை குறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே டுவிட்டர் செயலிக்கு பதிலீடாக திரட்ஸ் (Threads) எனும் ஓர் புதிய செயலியை மெட்டா அறிமுகம் செய்கின்றது.
இந்த செயலியை ஆப் ஸ்டோரின் ஊடாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
டுவிட்டர் செயலியை போன்று எழுத்து மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள கூடிய ஓர் செயலியாக இந்த திரட்ஸ் செயலி அமையப்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம்
இந்த செயலியை இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
டுவிட்டருக்கு நிகரான ஓர் வடிவமைப்பினை இந்த செயலிக் கொண்டுள்ளது.
நாளொன்றுக்கு பார்வை இடக்கூடிய டுவிட்களின் எண்ணிக்கையை வரையறுத்தமை, ப்ளூடிக் அங்கீகாரத்திற்கு கட்டணம் அறவீடு செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகள் டுவிட்டர் செயலியில் அண்மைக் காலமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.