தாம் ஆதரிக்கின்ற கட்சி தோல்வியடையும் என்ற கூற்றை விமர்சித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க
தாம், எந்தக் கட்சியை ஆதரித்தாலும், அது தேர்தலில் தோல்வியடையும் என்று கூறுவதை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க விமர்சித்துள்ளார்.
ஊடகங்களிடம் இந்த விமர்சனத்தை வெளியிட்ட அவர், இந்தக் கூற்றுக்கள் தம்மைத் தாக்கும் வழக்கமான முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று கூறியுள்ளார்.
அத்தநாயக்கவுக்கு எதிரான கூற்றுக்கள்
இதன்போது, எப்போதும் வெற்றி பெற்ற ஒருவரின் பெயரைக் கூறுங்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அநுரகுமார திஸாநாயக்கவின் கட்சி 60 வருடங்களாக தோல்வியடைந்து வந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தாங்கள் வெற்றிக்காக மிகவும் கடினமாக உழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களோ, தோற்றவர்களோ இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தமக்கு எதிரான கூற்றுக்கள் பழிவாங்கும் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் கூறப்பட்டுள்ளதாக அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கேள்விகளைக் கேட்பவர்களை அங்கொடைக்கு அனுப்ப வேண்டும், ஏனென்றால் அவர்கள் அரசியலில் ஈடுபடுபவர்கள் அல்லர் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.